அமெரிக்காவில் கார் ஒன்றின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் போலீஸ் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள இடாஹோ மகாணத்தில் டயர் பழுதாகிய நிலையில் கார் ஒன்று டென் மைல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸ் ஒருவர் அந்த காரின் ஓட்டுனருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த காரின் மீது டிரக் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காருக்கு வெளியே உட்கார்ந்து டயரை சரி பார்த்துக் கொண்டிருந்த டிரைவரும், அவருடன் இருந்த போலீசும் உடனடியாக எழுந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஆனால் இந்த விபத்து சம்பவத்தில் 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.