மேற்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நேற்று சத்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்கர் அலகில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன.
இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அல்பேனியா அரசு, 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷிஜாக் நகர் அருகே சுமார் 30 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் கணக்கெடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.