இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் என்ற நகரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ‘FLORONA’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் திரிபுகளால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலில் ‘FLORONA’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்புளுயன்சா குளிர் காய்ச்சலுடன், கொரோனா வைரஸ் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரஸ் உருவாகியுள்ளது.
இந்த ‘ப்ளோரனா’ புதிய வைரஸ் பாதிப்பு இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் என்ற நகரில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்றிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ‘FLORONA’ புதிய வைரஸ் கொரோனாவுடன் இணைந்து கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.