Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரண்டாவது கணவருடன் வசித்த கர்பிணிப்பெண் வெட்டிக்கொலை.!!

மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக்கொள்ளப்பட்டார் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே  வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது  தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர்.

Related image

இதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணிப் பெண் அம்சத் உயிரிழந்தார். படுகாயமடைந்த மதன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் அம்சத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலையை முதல் கணவர் வடிவேலு  செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி, அவரை  வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |