Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பசியில் வாடும் ஆதரவற்றோர்… தன்னார்வலர்களின் தன்னிகரற்ற செயல்… பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு பழனியில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி பழனி பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் ஆதரவற்றோர் 500 பேருக்கு பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா முன்னிலையில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |