தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு சிறுமியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு இந்த உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது முதல் திரைப்படமான “ரோஜா” என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின் “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் தற்போது வெளியான “99 சாங்ஸ்” என்ற திரைபடத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
https://www.instagram.com/tv/CR8h6a6lBEo/?utm_source=ig_embed&ig_rid=be67c1d7-708b-404c-941a-74a696c9b404
இவர் “மூப்பிலா தமிழ் தாயே” என்ற பாடலை தற்போது எழுதி வருகிறார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான “ரோஜா” என்ற படத்தில் இடம்பெற்ற “சின்ன சின்ன ஆசை” என்ற பாடலை ஒரு சிறுமி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் மற்றும் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.