சாதாரணமான ஆமையை காட்டிலும் இந்த ஆமை வித்தியாசமாக மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அதை காண அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூட்டமாக பசுதேவின் வீட்டிற்கு படையெடுத்தனர்.. மேலும், அவர்கள் அந்த அதிசய ஆமையை பார்த்து ரசித்து வியந்து சென்றனர்.
இந்த அதிசய சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் பசுதேவின் வீட்டுக்கு சென்று அந்த மஞ்சள் நிறமுள்ள அதிசய ஆமையை கைப்பற்றினர். மேலும், இந்த ஆமை ‘அல்பினோ’ (albino turtle) எனப்படும் அரியவகை ஆமை இனத்தை சேர்ந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பசுதேவ் தன்னுடைய தோட்டத்தில் கண்டுபிடித்த இந்த அரிய வகை ஆமையின் போட்டோ மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.