Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா அப்படி பேசவில்லை…! கேவலப்படுத்தி வச்சு இருக்குறத… எடுத்து சொல்லத்தான் செஞ்சாரு.. !!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா என்ன சொல்லி இருக்கிறார்? எங்கே பேசி இருக்கிறார். அவர் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பதை சொல்கிறார், மனுதர்மத்தில் எங்களை இப்படி எழுதி இருக்கிறார், இப்படி ஒரு இழி சொல்லை போட்டு. சூத்திரர் என்று என்ன ? அதை அப்படி எழுதி இருக்கு.

இப்படி எழுதி இருக்கியே என்று அதாங்கத்தில், எங்களை காலம் காலமாக இந்த இழிவை சுமக்க வைத்திருக்கிறீர்களே என்று பேசுகிறார். அவராக பேசவில்லை.  இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாக எங்களை இப்படி எழுதி கேவலப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அவர் எடுத்துச் சொல்கிறார். அவராக பேசவில்லை. அவர் இருப்பதை எடுத்துச் சொல்கிறார்.

மனுநீதி அடிப்படையில் தான் இங்கு எல்லாம் நடக்கிறது, புதிய கல்விக் கொள்கையே  மனுநீதி அடிப்படையில் தான் வகுக்கப்பட்டுள்ளது. அப்படி கேட்கக் கூடாது, அப்படி சொல்லவே கூடாது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் அரசியல் சாசனத்தில் இருக்கிறதா? ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பதெல்லாம் அரசியல் சாசனத்தில் இருக்கிறதா? ஒரே வரியெல்லாம் இருக்கா ?அதெல்லாம் கேட்கக் மாட்டேங்குறீங்க என தெரிவித்தார்.

Categories

Tech |