ரஷ்யாவில் ஒரு விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைந்த சிவப்பு நரி ஒன்று அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் டொமோடிடோவோ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதிக்குள் திடீரென புகுந்த சிவப்பு நரி ஒன்று அங்கே அங்குமிங்கும் சுற்றி திரிந்து ஓடிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஆனால் பயணிகள் சிலர் ஆச்சரியத்துடன் ஆர்வமிகுதியால் நரி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பின்தொடர்ந்து தங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்தனர்.
ஏற்கனவே பயந்து போய் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நரி பயணிகள் பின் தொடந்ததால் மேலும் மிரண்டு பாதுகாப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அதிகாரிகள் நரியை அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த சிவப்பு நரி பாதுகாப்பை மீறி உள்ளே புகுந்து எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்க விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.