தமிழில் ரீமேக் ஆக இருக்கும் 3 தேசிய விருது பெற்ற ‘அந்தாதுன்’ படத்தில் தமிழ் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதுன்’ என்ற படம் இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், மற்றும் சிறந்த திரைக்கதை போன்றவைகளுக்காக மூன்று தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்து, அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் பங்கேற்றிருந்தார். இது குறித்து தியாகராஜன் பேசுகையில் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருப்பதாகவும், மேலும் அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்ட கதையாகும்.
நடிகர் பிரசாந்த் அவர்கள் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரி மாணவரும், கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இப்படத்தின் கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் இப்படத்திற்கு, இன்னும் பெயர் வைக்கவில்லை என்றும் இதற்கான இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது எனக் கூறினார்.