கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்கி ஆசிரமத்தில் பினாமி சொத்து பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆலயத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார். இவர் தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக்கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் ஆன்மீக பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கல்கி விஜயகுமார் மற்றும் அவரது மகன் இருவரும் வெல்னஸ் குரூப் ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. இதையடுத்து ஹைதராபாத் பெங்களூர் சென்னை போன்ற கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று இரவு உடன் முடிவடைந்த இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் துபாய் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய முக்கிய நபர்களான கல்கி விஜயகுமாரும் அவரது மனைவியும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பதோடு ஆவணங்களில் கையெழுத்திட மறுத்து விட்டதாகவும் வருமானவரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.