சேலம் மாநகர், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் கொடூரன் ஜேம்ஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்த வழக்கு விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், வழக்கை விசாரணை செய்த சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், ஜேம்ஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.. மேலும் நீதிபதியளித்த தீர்ப்பைக் கேட்ட ஜேம்ஸ் கண்ணீர் விட்டு கதறி அழுது, நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..