Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

படிக்க ஆசையா இருக்கு… ஆனா முடியல… மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்..!!

காயமடைந்து பார்வை பறிபோன நிலையில் மருத்துவ உதவி வேண்டி பள்ளி சிறுவன் ஒருவர் உதவி கோரியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குள்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. அன்றாடம் கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவருடைய மகன் சின்ராசு (12), அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்தபொழுது கீழே விழுந்தார். அப்போது சிறுவனுக்கு கண் பார்வை பறிபோனது. இதையடுத்து சுற்றுப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அவருக்கு கண் பார்வை சரியாகவில்லை. இதனால் மருத்துவர்கள் வழங்கிய மூக்குக் கண்ணாடியை அணிந்துள்ளார்.

இருந்தும், புத்தகத்தைப் படிக்க முடியாத சூழல் உள்ளதால் சின்ராசு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். மேலும், அவரிடம் இருந்த கண்ணாடியும் உடைந்து போகவே பணம் இல்லாததால் புது கண்ணாடி வாங்கமுடியாமல் உள்ளார். இந்நிலையில் தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் யாரேனும் சிகிச்சை பெற உதவிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |