சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், அரங்கநாதன் தெருவில் வசித்து வருபவர் ரம்யா.. 16 வயதுடைய இவர் 10-ஆவது படித்து விட்டு, வீட்டிலிருந்து வந்தார்.. இவரது தந்தை கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.. தாய் பழவியாபாரம் செய்து வருகிறார். இதனால் வீட்டு வேலைகளை செய்யுமாறு மகள் ரம்யாவிடம் அவரது தாய் கூறியுள்ளார்.
ஆனால் ரம்யா வீட்டு வேலைகளை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவரது தாய் அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரம்யா, நேற்று தன்னுடைய அறையிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி.. தற்கொலை அதற்கு தீர்வல்ல.. தமிழகத்தில் 24 மணி நேரம் செயல்படும், 104 என்ற இலவச எண்ணை தொடர்புக் கொண்டு, தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பேசி தீர்வு காணுங்கள்..