மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதன்படி இந்த மாணவி இன்று வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் யாரும் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாணவியின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.