சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பள்ளி மாணவர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” மாறுபாடு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பல நாடுகளும் விமான சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. இந்நிலையில் சுவிஸ் சுகாதாரத்துறை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் “ஒமிக்ரான்” தொற்று பாதிப்பு இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரும் பாஸல் பகுதியில் வசித்து வருபவர்கள் என்பதும், அதில் ஒருவர் பள்ளி மாணவர் ( 19 வயது ) என்பதும் தெரியவந்துள்ளது. அதேசமயம் அந்த மாணவர் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர், விமான பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தொற்று பாதித்த மாணவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து “ஒமிக்ரான்” தொற்று பாதிப்பு அந்த மாணவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.