நாமக்கல் மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியில் குமார் மற்றும் சாரதி இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் குமார் யாருக்கும் தெரியாமல் லதா என்ற வேறொரு பெண்ணை கடந்த 3 ஆண்டுக்கு முன்பு 2-ஆவதாக திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இதனை அறிந்த முதல் மனைவி சாரதி தன்னை ஏமாற்றி திருமணம் விட்டதாக குமார் உள்பட 4 பேர் மீது திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் குமாரை கைது செய்து, மேலும் தலைமறைவாக உள்ள லதா உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.