அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்திலேயே தசரா விடுமுறை வரவுள்ளது. அந்த விடுமுறை காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தது.
அந்த சமயத்திலே ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதற்கு இடையே தற்போதைய பொறுப்பாளர்கள் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி தேர்தல் நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இபிஎஸ் தரப்புக்கு, இப்போது நீங்கள் தானே பொறுப்பில் இருக்கிறீர்கள்.
ஆகவே தேர்தல் நடத்துவதற்கான அவசரம் என்ன இருக்கிறது ? என்ற கேள்வி எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து மேலும் வாதங்கள் நடைபெற்ற போது, இடைக்காலமாக தற்பொழுது அதிமுகவிலேயே தேர்தல் நடத்த தேவையில்லை என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஆகவே இன்றைக்கு உத்தரவு வெளிவரும்போது இடைக்காலமாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும், விசாரணைகள் முடிந்த பிறகு தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய விசாரணை தான் இன்று நடைபெற்றது.இதன் அடிப்படையில் இனி தசரா விடுமுறைக்கு பிறகு நடைபெறும் விசாரணை முடிந்த பிறகு தேர்தல் என்கின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.