தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக சாலையில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றிருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை அம்ரித் மகாதேவ் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இவற்றின் ஒரு பகுதியாக இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து ஒற்றுமை ஓட்டம் தொடங்கியுள்ளது. இதில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் ராய், துணை கமாண்டன்ட் ராஜன் பாலு ஆகியோர் ஒற்றுமை ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளனர். இதனை அடுத்து பெரிய களக்காட்டூர் வரை 5 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளனர். மேலும் இதில் 100-க்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.