முதன்முறையாக ஒமிக்ரான் தொற்று தொடர்பில் எச்சரித்த தென்ஆப்பிரிக்க மருத்துவர் ஒருவர் தற்போது முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் Angelique Coetzee என்ற மருத்துவர் முதன்முதலாக “ஒமிக்ரான்” தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஒமிக்ரான் நோயாளிகள் கொரோனா தொற்று நோயாளிகளை போல் சுவை இழப்பால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதிக நாடி துடிப்பு விகிதம் மற்றும் தீவிரமான சோர்வு உள்ளிட்ட அசாதாரண நிலையில் காணப்பட்டதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக Angelique Coetzee-விடம் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் 4 பேரும் கொரோனா பாதிப்புக்கு பிறகு கடுமையான சோர்வால் அவதிபட்டதாக Angelique கூறியுள்ளனர். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது பெல்ஜியம், ஜேர்மனி, பிரித்தானியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஹொங்ஹொங், பெல்ஜியம், பொஸ்வானா உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் தொற்று தொடர்பில் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.