தமிழகத்தில் கூடிய விரைவில் வயது மூத்தோருக்கான தனி சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய மனநல மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இந்த புதிய மருத்துவமனையின் திறப்பு விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் வயது மூத்தோருக்கான சிறப்பு மருத்துவமனை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது என்று கூறினார்.