ஆஞ்சநேயர் கோவில்களில் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்று.
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பக்தகோடிகள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பன்னீர், பழங்கள், தயிர், பால் உள்ளிட்ட பல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். இதில் ஏராளமான பக்தகோடிகள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்து உள்ளனர்.