Categories
உலக செய்திகள்

ஆண்களே உதவுங்க..! அது பற்றாக்குறை இருக்கு… கோரிக்கை வைக்கும் விந்து வங்கி..!!

கொரோனாவால் விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக சீனாவிலுள்ள விந்து வங்கி ஒன்று ஆண்களிடம், விந்துவை நன்கொடையாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகையே கதிகலங்க வைத்துவரும் இந்த கொடிய கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே ஒரு வித பயத்திலேயே இருந்து வருகின்றனர்.. ஏனென்றால் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து மட்டும் தான் ஒரே தீர்வு என்பதால், மக்கள் வெளியில் வந்து செல்லவும் பயப்படுகின்றனர்.

இந்தநிலையில், சீனாவின் விந்து வங்கி ஓன்று கொரோனா காரணமாக விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஆண்கள் தங்களது விந்துவை நன்கொடையாக வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டில் இருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தென்மேற்கு சீனாவிலுள்ள ஒரு விந்தணு வங்கி ஆண் குடிமக்கள் அனைவரும் தங்களின் விந்தணுக்களை முன்வந்து தானம் செய்ய வேண்டும்.. அப்படி செய்வதன் மூலம் விந்து பற்றாக்குறை ஏற்படுவதை  தீர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுபரவி வருவதன் காரணமாக, தன்னார்வலர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.. இதனால் குறிப்பிட்ட பெற்றோர்களுக்கு உதவ முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக யுன்னான் மாகணத்திலுள்ள கருவுறுதல் மருத்துவமனை கூறியுள்ளது.. 20% மக்கள் மட்டுமே தகுதிவாய்ந்த நன்கொடையாளர்கள் என்பதால் விந்தணுக்களின் தரம் மிக குறைவாக இருப்பதால் இந்த பிரச்சினை தற்போது அதிகரித்துள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றுமுன்தினம் மருத்துவர் லி வென்ஃபு (Li Wenfu) வில் கூறுகையில், வகை A மற்றும் வகை O இரத்தத்திலிருந்து (விந்து ) கடுமையான பற்றாக்குறையில் உள்ளன. தொண்டு செய்யும் உள்ளூர் ஆண்கள் பங்கேற்று நன்கொடையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.. நல்ல ஆரோக்கியமான ஆண் சீன குடிமக்கள், 22 – 45 வயதுக்கு உட்பட்டவர்களே தன்னார்வலர்களாக ஆவதற்கு தகுதியானவர்கள் என்று விந்தணு வங்கி கூறியுள்ளது.. அதேபோல முடி உதிர்தல் அல்லது கடுமையான குறுகிய பார்வை திறன் கொண்டவர்கள் இதில் பங்கேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு தகுதிவாய்ந்த நன்கொடையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், குடிமகன் பங்களிப்பைச் செய்வதற்கு முன் 3 முதல் 7 நாட்கள் வரை பாலியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க  வேண்டும்.. முழு செயல்முறையும் முடிவதற்கு சுமார் 8 மாதங்கள் ஆகும் என்று டாக்டர் லி கூறுகிறார். நன்கொடை முடிந்ததும் தன்னார்வலருக்கு 5,000 யுவான் வரை (இந்திய மதிப்பு ரூ 53,273) வழங்கப்படும் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |