தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தற்போது ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தி.நகரில் உள்ள பாஜக கமலாயத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாஜக கூட்டம் நடைபெற இருக்கிறதாம். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பலரும் பாஜக அலுவலகத்தில் குவிய தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டமானது 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் சிலர் தற்போது பாஜகவின் நிலவும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்காக தான் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் தற்போது பாஜக கட்சியில் புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் அண்ணாமலையின் புதிய கூட்டம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது