வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வடமேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு 640 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் மேலும் வலுவடைந்து வடக்கு ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே தற்போது கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடலூரில் உள்ள துறைமுகத்தில் புயலின் எச்சரிக்கைக்கான கூண்டை ஏற்றப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து தமிழகத்தில் நேரடித் தாக்கம் இருக்க வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.