Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம்… மாணவன் மரணம்

நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து மரணம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அலெக்சாண்டர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அலெக்சாண்டர் உடன் படிக்கும் சக மாணவருக்கு பிறந்தநாள் காரணமாக பள்ளி முடிந்து மாலை 5 மணி அளவில் தோட்டத்திற்கு கேக் வெட்டி கொண்டாட சென்றுள்ளனர். கொண்டாட்டம் முடிந்ததும் சட்டையில் ஒட்டிய கேக்கை சுத்தம் செய்ய கிணற்றில் இறங்கியுள்ளார் அலெக்சாண்டர்.

குனிந்து சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் கத்தி கூச்சல் போட்டுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த சில இளைஞர்கள் கிணற்றில் குதித்து மாணவனை காப்பாற்ற முயன்றுள்ளனர். இருந்தும் அவர்களால் காப்பாற்ற முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் மாணவனை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு மாணவனின் உடலை மீட்டு வந்தனர் தீயணைப்பு வீரர்கள்.

இச்சம்பவம் குறித்து அரச்சலூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |