Categories
உலக செய்திகள்

இதுனால இனப்பெருக்கம் செய்ய முடியுமா…? விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட Xenobot…. ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

அமெரிக்க விஞ்ஞானிகளால் தவளையின் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகள் தவளையின் ஸ்டெம் செல்களிலிருந்து Xenobot-ஐ உருவாக்கியுள்ளனர். இந்த Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுடைய இந்த Xenobot-ல் செயற்கை நுண்ணறிவை இணைக்கும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனையை ஹார்வர்ட் மற்றும் வெர்மாண்ட் டவ்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் Xenobot-ல் சேர்க்கப்படும் நுண்ணறிவு புரோகிராம் மூலம் கடலில் கலந்துள்ள நுண் நெகிழிகளை அகற்றுவது, மனிதர்களின் ரத்த நாளங்களுக்குள் புகுந்து நோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பது, அணு கழிவுகளை நீக்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் புதிய ஸ்டெம் செல்களை Xenobot-கள் தானாக உள்ளிழுத்து இனப்பெருக்கம் செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |