தேனி மாவட்டம் போடி அருகே பாறைகள் உருண்டு தீடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் மூணார், போடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போடி,மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.போடி அருகே புளியுற்று என்ற இடத்தில் காலையில் பாறைகள் உருண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுவதும் பாறைகள் மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதை அடுத்து போடி, மூணார் சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மூணார் செல்லும் வாகனங்கள் முந்தல் சோதனைச் சாவடியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் போடிமெட்டு சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன.மலை சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பால் கேரள மாநிலத்திற்க்கு வேலைக்கு செல்லும் தோட்டத் தொழிலாளிகள் முந்தல் சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.