சக்தி மெட்ரிக் பள்ளி மனைவி உயிரிழந்த விவகாரத்தில் பேரம் பேசியதாக கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் இதுவரை மர்மமாக இருக்கக்கூடிய சூழலில் அதற்குப் பின்பாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளாகவும், அந்த காட்சிகளின் புகைப்படங்களாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிசிடிவி காட்சியின் ஒரு புகைப்படம் ஆனது வெளியாகியிருக்கிறது. மாணவி உயிரிழந்ததாக சொல்லப்படக்கூடிய ஜூலை 13ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு மாணவியின் தாயார் செல்வியும், பள்ளி நிர்வாகத்தில் இருந்து பள்ளி நிர்வாகிகள் சார்பாக பேச்சுவார்த்தை நடந்த சிசிடிவி காட்சியின் புகைப்படமானது வெளியாகி இருக்கிறது.
பள்ளி நிர்வாகம் சார்பில் எங்களை அழைத்து யாரும் பேசவில்லை என்று மாணவியின் தாயார் கூறிய நிலையில், இந்த புகைப்படம் தற்போது விசாரணையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாணவியின் பெற்றோருக்கு ரூபாய் 8 லட்சம் தருவதாக பள்ளி சார்பில் கூறப்பட்டதாகவும், மாணவியின் பெற்றோர் தரப்பில் 20 லட்சம் இழப்பீடு கூறியதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.