ஊரடங்கை மீறி மத பிரச்சாரம் செய்ததாக பிரிட்டனில் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவி அதிக அளவில் உயிர்களைக் கொன்று குவித்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் தலைநகரான லண்டனில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு நாடே இக்கட்டான சூழ்நிலையில் கதிகலங்கி நிற்கும் நிலையில் தமிழர் ஒருவர் ஊரடங்கை மீறி கிறிஸ்துவ மதம் குறித்து பிரச்சாரம் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்