Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் வேடிக்கை பார்க்க மாட்டான்…! இது ஒன்றிய அரசுக்கு தெரியும்… பாஜகவை எச்சரித்த பிரபல தமிழ் இயக்குனர் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், வெள்ளைக்காரனுக்கு பிறகு தான் 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இங்கே  கவிப்பேரரசர் கூட சொன்னாங்க. 1938 வெள்ளக்காரன் ஆளும் போது எப்படி தாளமுத்தும்,  நடராஜனும் இந்த மண்ணில் மொழிக்காக உயிர் கொடுக்க முடியும். அப்போ ஆண்டது யார் ?  ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி )  அப்போ நேரடியா சொல்லி தான் ஆகணும்.

வெள்ளைக்காரன் காலகட்டத்திலேயே ஹிந்தி உள்ள வருதுன்னா, இப்ப இருக்கக்கூடிய இந்திய ஒன்றிய அதிகார வர்க்கம் இல்லை. ஆரியம் தான் தமிழை அழித்து, ஹிந்தி திணித்து, சமஸ்கிருதத்தை நிலை நாட்ட நினைக்கிறது. அன்றும், இன்றும், என்றும்.. அப்போ உங்கள் சூழ்ச்சி என்ன ? இதை ஒருபோதும் தமிழனும் வேடிக்கை பார்க்க மாட்டான்.

நிறைய பேர் இன்னும் பேசறதுக்கு இருக்காங்க. எங்களுடைய விவசாயிகளை டெல்லியில் நிர்வாணமாக ஓடவிட்ட போது, கத்திப்பாரா பாலத்தில் என்ன நடந்தது ? என்பது உலகத்திற்கு தெரியும். இந்திய ஒன்றியத்துக்கு தெரியும். சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த அந்த அரச முத்திரையில் காங்கேயம் காளை இருந்ததாக வரலாற்றுச் சான்று உண்டு. 4 , 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தினுடைய எல்லையை தாண்டி இருந்த இடத்திலேயும் தமிழன் உடைய கலாச்சாரம் இருந்திருக்கு என தெரிவித்தார்.

Categories

Tech |