பிரித்தானியாவில் டாக்சி ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் லிவர்பூலில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் பகல் 10.59 மணி அளவில் டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் டாக்சிக்குள் இருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் டாக்ஸி வெடிப்பு சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளான பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சம்பவத்தன்று அந்த டாக்ஸியில் ஏறிய நபர் ஒருவர் டாக்சியின் ஓட்டுநரான David perry-யிடம் லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு சொல்லுமாறு கூறியுள்ளார். பின்னர் டாக்ஸியில் பயணித்த அந்த நபரின் உடையில் சிறிய மின் விளக்கு ஒன்று இருப்பதனை David கவனித்துள்ளார்.
அதன் பிறகு அவர் தற்கொலை குண்டுதாரியாக இருக்கலாம் என்ற அச்சத்தில் டாக்ஸி ஓட்டுனர் David அந்த நபரை டாக்சிக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியில் குதித்துள்ளார். இந்த நிலையில் அந்த கார் திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஆனால் David மட்டும் தக்க சமயத்தில் காருக்குள் வைத்து அந்த நபரை பூட்டாமல் இருந்திருந்தால் பல உயிர்கள் அந்த நபரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அந்த டாக்சி ஓட்டுனரின் துணிச்சலான செயலுக்காக பாராட்டுக்கள் பலவும் குவிந்து வருகிறது.