அமெரிக்காவில் உயர்நிலை பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் டலாஸில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர் ஒருவர் அங்கு பணிபுரியும் மற்றொரு ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அந்த உயர்நிலைப்பள்ளியிடமிருந்து காவல்துறையினருக்கு போனில் தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேத்யூ லினோ ( 56 ) என்ற ஆசிரியர் அதே பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் நடந்த அன்று மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னதாகவே இந்த இரண்டு ஆசிரியர்களும் அங்கு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் மேத்யூவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தால் மாணவ, மாணவிகள் யாருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.