Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பாவை தாக்கிய காவல்துறையினர்… செல்போன் டவர் மீது இளம்பெண் ஆர்ப்பாட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை தாட்கோ நகரில் மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜுன் 18 – ஆம் தேதியன்று தனது வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை சித்தப்பா வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது புளியரை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற பிரான்ஸ் அந்தோணியை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரிடமிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்ததோடு, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனைப் பார்த்த அவருடைய உறவினர்கள் அந்தோணியை காவல் நிலையத்திலிருந்து அழைத்து சென்று செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாற்றுத்திறனாளியான அந்தோணியை தாக்கியதோடு அவரின் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணியின் 2 – வது மகளான அபிதா என்பவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையின் எதிர்ப்புறம் இருக்கும் செல்போன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்ததோடு, தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிதாவிடம் 5 மணி நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரின் தற்கொலை முயற்சியை கைவிட செய்துள்ளனர். அதன்பின் இரவு 9.20 மணி அளவில் அபிதா செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். மேலும் தனது  கோரிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |