Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால்… மன உளைச்சல் ஏற்பட்ட காரணத்தினால்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

மொபைல் போனில் இருக்கும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபுரங்கணி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செங்காடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கி அதே பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சசிகுமார் மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்துள்ளார். இதனால் முதற்கட்டத்தில் சாதாரணமாக விளையாடியது போக தற்போது நாளடைவில் அதற்கு அடிமையாகியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட சசிகுமார் தான் தங்கியிருந்த அறையில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பற்றி தகவல் தெரிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |