Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல்… ஏமாந்துபோன இளம்பெண்… கைது செய்த காவல்துறையினர்…!!

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் கசீர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 28 வயது உடைய பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதற்கட்டத்தில் பழக்கமாக இருந்தது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண் சென்னை பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் காதலர்கள் இரண்டு பேரும் சென்னையிலிருந்து அவர்களது ஊருக்கு பேருந்தில் வந்துள்ளனர்.

அதன்பின் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசை வார்த்தைகள் பேசி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கர்ப்பமான அந்தப் பெண்ணிற்கு பழச்சாறு கொடுத்து கர்ப்பத்தை கலைத்தாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின் அப்பெண் அதை பற்றி கசீர்ராஜிடம் கேட்ட போது கசீர்ராஜ் அவரை தகாத வார்த்தைகள் மூலம் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் அடிப்படையில் கசீர்ராஜியுடைய தாய், தந்தை, அண்ணன் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கசீர்ராஜை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |