வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவர் முகநூலை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது விளம்பரத்தில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரப்படும் எனவும் வேலை தேடுபவர்கள் தனது செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து வாசு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தனது பெயர் பாண்டியன் எனவும் மதுரையைச் சேர்ந்த பல பேருக்கு தான் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் தனக்கு ஒரு லட்சம் கொடுத்தால் பாஸ்போர்ட் உடன் வேலை வாங்கி தருவதாகவும் கூறி இருக்கின்றார். இதை நம்பி வாசு தனக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் பாண்டியன் தனது நண்பர் பாரதிராஜாவின் வங்கி கணக்கு ஒரு லட்சம் பணத்தை செலுத்துமாறு வாசுவுடன் கூறியுள்ளார்.
பின்னர் வாசு பாரதிராஜாவின் வங்கி கணக்குக்கு சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று பணத்தை செலுத்தி இருக்கின்றார். பணத்தை பெற்றுக் கொண்ட பாண்டியன் மற்றும் பாரதிராஜா உள்ளிடோர் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். இதனால் வாசு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் வாசுவிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் நேற்று முன்தினம் மதுரை மாட்டுத்தாவணியில் பதுங்கி இருந்த பாண்டியனை கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்த 45 பாஸ்போர்ட், கம்ப்யூட்டர், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள். மேலும் போலீசார் தலைமுறைவாக இருக்கும் பாரதிராஜாவை தேடி வருகின்றார்கள்.