Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்வதாக சொல்லி… சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 16 வயது மகளை  காணவில்லை என்று கடந்த ஜூன் 28ஆம் தேதி குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். புகாரினடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிறுமியும், இடையர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற 20 வயது இளைஞரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தது கண்பிடிக்கப்பட்டது.

மேலும் அந்த இளைஞர் சிறுமியிடம் தான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை  வார்த்தைக் கூறி அழைத்து சென்று, அவருடைய நண்பரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து இளைஞரின் நண்பர் வீட்டுக்குச் சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர்.. பின்னர், ஹர்ஷாத்தை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில்  அடைத்தனர்.

Categories

Tech |