அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரியாம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் நத்தம்மேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.