Categories
மாநில செய்திகள்

“மொத்தம் 2391 அரசு பள்ளிகளில்” இந்த வசதி இல்லை…. அதிர்ச்சி தகவல் – பள்ளிக்கல்வித்துறை…!!

கணக்கெடுப்பின் முடிவில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீருக்காக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் 2391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கழிப்பறை வசதி இல்லாத இந்த அரசு பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறையிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனால் அந்த பள்ளிகளில் கழிவறை அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற தகவலை உடனே அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே கழிப்பறை இல்லாத அந்த பள்ளிகளில் கழிப்பறை வசதி அமைக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

Categories

Tech |