கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மார்ச் 23 ஆம் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் பலரும் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே உற்றித்திரிவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், விதிமுறைகளை மீறியதாக இதுவரை 300 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 752 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பொதுமக்களும் 144 தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடித்து அரசுக்குகும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு தருமாறும் அப்படி இல்லாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.