சட்ட விரோதமாக சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2, 700 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழ்நிலவூரில் அமைந்திருக்கும் ஓடைகளில் 1,500 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தமிழ்மொழிபட்டு வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் கிணற்று வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் என மொத்தமாக 2, 700 சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் அந்த சாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆண்டி, ஏழுமலை, அழகுராஜா என 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.