தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பூ பாஜக கட்சியின் நிர்வாகியும் கூட. இவர் நேற்று டுவிட்டரில் தமிழ் வாழ்க என்பதை தமில் வாழ்க என்று எழுத்து பிழையாக பதிவிட்டு இருந்தார். இதனால் நெட்டிஷன்கள் பலரும் குஷ்புவை இணையத்தில் வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் குஷ்பூ தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு தற்போது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் ஏழை திராவிட இனமே, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது. உண்மையான முகங்களை காட்ட முதுகெலும்பு வேண்டும். உண்மை தமிழன் எப்போதும் முகமூடிக்கு பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டான் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் குஷ்புவின் பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.