துருக்கியில் வாடிக்கையாளருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி கொடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துருக்கி நாட்டில் எஸ்கிஷெகிர் (Eskişehir) என்ற இடத்தில் இந்த கேவலமான சம்பவம் நடந்துள்ளது.. ஆம் வாடிக்கையாளர் ஒருவர் பீட்ஸா ஆர்டர் செய்திருந்தார். அதன்படி அதனை விநியோகிக்கும் நபர் வாடிக்கையாளர் வீட்டின் வாசல் பக்கத்தில் நின்று கொடுக்கப்பட வேண்டிய பீட்சாவில், உமிழ்நீரை (எச்சில்) துப்பிய பின் வழங்கியுள்ளார். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த அருவெறுப்பான நிகழ்வு அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானதால் சிக்கிவிட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த கேவலமான நிகழ்வை செய்த, பீட்சாவை வழங்கிய புராக் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி புராக்குக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே புராக் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மீதமுள்ள 2 ஆண்டுகளையும் சிறையில் கழிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.