Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கிய கொலை வழக்கு..! போலீஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜார்ஜ் பிளாய்ட் என்பவரது கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மினியாபோலீஸ் நகரில் வசித்து வரும் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். மேலும் அங்கு பொருள்களை வாங்கியதற்காக அவர் அளித்த பணத்தில் 20 டாலர் கள்ள நோட்டு இருந்ததாக காவல்துறையினருக்கு கடையின் ஊழியர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜார்ஜ் பிளாய்ட்டை விசாரிப்பதற்காக காவல்துறை வாகனத்தில் ஏறுமாறு அவரை அழைத்துள்ளனர்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் காவல்துறை அதிகாரியான டெரெக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் போட்டு அவரின் கழுத்தில் தனது கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதனால் சார்ஜ் பிளாய்ட் “என்னால் மூச்சு விடமுடியவில்லை எழுந்திருங்கள்” என கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த காவல்துறை அதிகாரி அப்போதும் இரக்கம் காட்டவில்லை. இதன் காரணமாக சார்ஜ் பிளாய்ட் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அமெரிக்கா முழுவதும் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் இனவெறிக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த கொலை வழக்கில் 4 காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, காவல்துறை அதிகாரியான டெரெக் சாவின் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் டெரெக் சாவின் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் குற்றவாளியாக கருதப்பட்ட டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதிகள் இந்த தண்டனையானது அதிகாரம் மற்றும் நம்பிக்கையை துஸ்பிரயோகம் செய்ததற்காகவும், ஜார்ஜ் பிளாய்ட்டிடம் கொடூரமாக நடந்து கொண்டதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் நீதிமன்றத்தில் வைத்து கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தான் செய்த தவறுக்காக மனதார மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே டெரெக் சாவினுக்கு இந்த தண்டனை பொருத்தமானது தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |