மகேந்திரசிங் தோனி மேட்ச் பிக்சிங் (Match Fixing) என்பது கொலையை விட கொடியது என்று குற்றம் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடையை சந்தித்தது. இதையடுத்து அந்த அணி கடந்த ஆண்டு மீண்டும் களம் இறங்கி கோப்பையையும் வென்றது. இந்நிலையில் இதனை மையமாக வைத்து ஆவணப் படம் ஒன்று தயாராகியுள்ளது. இந்த படத்தின் பெயர் “ரோர் ஆப் த லயன்” (Roar of the lion). இந்த படத்தின் ட்ரெய்லர் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.
அந்த ட்ரெய்லரில் பேசியுள்ள அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, சி.எஸ்.கே. (CSK) அணி களத்திற்கு திரும்பியது உணர்ச்சிப்பூர்வமானது எனக் கூறுகிறார். தன் மீதும், தனது அணியினர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது மிகவும் கடினமான கால கட்டம் என்று தோனி தெரிவிக்கிறார். தங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கடுமையானதாக ரசிகர்கள் உணர்ந்ததாகவும் தோனி கூறுகிறார்.