Categories
உலக செய்திகள்

“ஒரு கையில் அப்பா.. மறு கையில் மறைந்த அம்மா”…. கண்ணீருடன் மணமேடை…. கலங்கி போன உறவுகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் இறந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத தருணம் ஆகும். மேலும் உறவினர்கள் சூழ்ந்திருக்க பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் மணமகனும், மணமகளும் தங்களது திருமண வாழ்வை மகிழ்ச்சியுடன் தொடங்குவர். இந்த மங்களகரமான நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு பெண்ணும் தனது தாய், தந்தை அருகில் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். ஆனால் பாகிஸ்தானில் தாயை இழந்த மணப்பெண் ஒருவர் இறந்த அம்மாவின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு கண்ணீருடன் மணமேடைக்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட சுமார் 57 வினாடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில் மணப்பெண் ஒரு கையில் தந்தையின் கரத்தை பிடித்துக் கொண்டு மறு கையில் உயிரிழந்த தாயின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கண்ணீருடன் மணமேடைக்கு செல்கிறார். அந்த மணமகளின் நிலையை கண்டு சுற்றியிருந்த உறவினர்களும் கண் கலங்கி நின்றனர். இதையடுத்து அந்த மணமகளின் தந்தையும் மகளின் கண்ணீரை கண்டு கலங்கி போனார்.

https://www.instagram.com/p/CXeSa17oDzd/?utm_source=ig_embed&ig_rid=b806bd7f-1026-46b2-bb6c-41f14b020e7f&ig_mid=FCBE59F7-8661-4D77-8982-B945305C58AD

அதன் பிறகு மணப்பெண்ணுடைய உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸ்கள் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது தங்களை அறியாமலேயே கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வருவதாக கமெண்ட் செய்துள்ளனர். அதிலும் ஒருவர் “தாய் என்பது கடவுள் கொடுத்த வரம். இந்த வீடியோவை பார்க்கும் போது என்னுடைய தாய் தான் நினைவுக்கு வருகிறார்” என்று உருக்கத்துடன் கமெண்ட் செய்துள்ளார்.

Categories

Tech |