சிறுமி ஒருவர் துணிச்சலுடன் சிங்கத்தை கையில் தூக்கி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குவைத் நாட்டில் உள்ள சாபியா என்ற பகுதியில் ஒரு வீட்டில் சிங்கக்குட்டி ஒன்று பெற்ற குழந்தை போல் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த சிங்கக்குட்டி திடீரென வீட்டிலிருந்து தப்பித்து வெளியே சென்றுள்ளது. அதன் பிறகு அந்த சிங்கக்குட்டி காணாமல் போனதால் அதன் உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த சிங்கக்குட்டியை அங்கு வந்த சிறுமி ஒருவர் எந்த பயமும் இல்லாமல் துணிச்சலுடன் கையில் தூக்கி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.