விமான நிலையத்தில் “மிஸ் யூ” பதாகையுடன் காத்திருந்த மகனை தாய் தனது செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
உலகில் தாயின் அன்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அதேசமயம் தாயை போல யாரும் பெற்ற பிள்ளைகளை அக்கறையுடன் தண்டிக்கவும் முடியாது. அந்த வகையில் அன்வர் ஜாபாவி என்ற இளைஞரை அவருடைய தாய் அதீத அன்பினால் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அன்வர் ஜாபாவி என்ற வாலிபர் வெகு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வரும் தனது தாயை அன்புடன் வரவேற்பதற்காக “வி மிஸ் யூ” என்ற பதாகையுடன் ஏர்போர்ட்டில் காத்திருந்தார்.
மேலும் அந்த பதாகையை கண்டு அன்வர் ஜாபாவின் தாய் அவரை அன்புடன் அரவணைத்து முத்தமிடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருடைய தாயோ எதிர்பாராதவிதமாக தன்னுடைய காலில் கிடந்த செருப்பை கழட்டி மகனை தாறுமாறாக விளாசியுள்ளார். இதையடுத்து அடி தாங்க முடியாமல் அன்வர் ஜாபாவி தப்பி ஓடி விட்டார். மேலும் அந்த வீடியோவை அன்வர் ஜாபாவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ அதிக வீயூஸ்களுடன் பயங்கர வைரலாகி வருகிறது.