இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது.. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். பலியானோரின் உடல்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் மாஸ்க், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி நல்ல முறையில் அடக்கம் செய்து வருகின்றனர்.. இருப்பினும், ஒருசில இடங்களில் கொரோனா மீண்டும் பரவி விடுமோ என்ற பயத்தினால், பொறுப்பற்ற முறையில் உடல்களை அடக்கம் செய்கின்றனர்.. இந்த அவலங்களும் ஆங்காங்கே சில இடங்களில் தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் சடலங்களை பிபிஇ உடையணிந்த அலுவலர்கள், அநாவசியமாக பெரிய குழிகளில் தூக்கி எறிந்து அடக்கம் செய்கின்றனர். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்.. ஆனால், இது போன்று பொறுப்பற்ற முறையில் அடக்கம் செய்வது கண்டனத்திற்குரியது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய பெல்லாரி மாவட்ட கலெக்டர், ”இந்த சம்பவம் முதலில் எங்கு நடைபெற்றுள்ளது என்பதை ஆய்வு செய்து பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Absolutely Shocking videos from the district of #Karnataka’s Health minister….
Who will answer for this ?
Is this why numbers are low ? Is this happening in other districts ? pic.twitter.com/tthm9RxXFj— Iʀsʜᴀᴅ (@irshad5005) June 30, 2020